In Carnatic music, Neraval or Niraval is an improvisation and elaboration of melody using one or two lines from a song. It is used to highlight the raga bhava effectively. The word Neraval in Tamil also means “filling the gap.” For these reasons, I thought it would be an interesting name for a blog where I can share my thoughts on a wide range of topics that interest me. In this blog, I would like to talk about the books and articles I have read on art, literature, and philosophy. In particular, among all the great works in literature, I want to highlight works written in Indian languages, which I believe deserve more respect and attention.
கர்நாடக இசையில், “நெரவல்” அல்லது “நிரவல்” என்பது ஒரு பாடலின் ஒரு அல்லது இரண்டு வரிகளை கொண்டு, அந்த ராகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, இசையைச் சுதந்திரமாக விரிவாக்கும் முறையாகும். இது ராக பாவத்தை சிறப்பாக வெளிப்படுத்த பயன்படுகிறது. மேலும், “நிரவல்” என்பதற்கு தமிழில் “வெற்றிடத்தை நிரப்புதல்” என்பதையும் பொருள் கொள்ளலாம். இந்த இரு அர்த்தங்களும் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக தோன்றியது. அதனால், எனக்கு ஆர்வமுள்ள பல்வேறு விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு வலைப்பதிவிற்கு இது ஒரு நல்ல பெயராக இருக்கும் என நினைத்தேன்.
இந்த வலைப்பதிவில், நான் கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றைப் பற்றிச் படித்த புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் குறித்து பேச விரும்புகிறேன். குறிப்பாக, இலக்கியத்தில் உள்ள சிறந்த பல படைப்புகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்கள் அதிக கவனமும் பெற வேண்டும் என நான் நம்புகிறேன்; அவற்றைப் பற்றி எழுத விரும்புகிறேன்.
